வட சென்னையில் ஐடி ஹப்: கலாநிதி வீராசாமி
வட சென்னையில் ஐடி ஹப் ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்படும் என்று கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். வேட்புமனு பரிசீலனை முடிந்திருக்கும் நிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் கிழக்குப் பகுதியில் தேர்தல் பணிகளுக்கான பணிமனையை இன்று (மார்ச் 29) அமைச்சர் சேகர்பாபுவும், கலாநிதி வீராசாமியும் திறந்துவைத்தனர்.
இதைதொடர்ந்து கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “களத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் வரவேற்கிறார்கள். முதலமைச்சரின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்றடைந்துள்ளது.
கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். 4281 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதிக்கு அறிவித்திருக்கிறார்.
வடசென்னை என்பது பிற்படுத்தப்பட்ட பகுதி, அதை தென் சென்னை, மத்திய சென்னை போல சமமாக கொண்டுவர இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுதல் உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் கொண்டு வந்திருக்கிறார்.
அடுத்ததாக ஐடி ஹப் ஒன்று அமைக்க கோரிக்கை வைத்திருக்கிறேன். மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் ஆகியவை கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
இந்த தேர்தலில் நான்கு முனைபோட்டிகள் இருந்தாலும், நாங்கள் செய்த ஆக்கப்பூர்வமான பணிகளை மக்களிடம் எடுத்து சொல்லுவோம். மிக்ஜாம் புயலின் போது என் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைச்சர் உட்பட அனைவரும் களத்தில் இருந்து வேலை செய்தோம்.
எண்ணூர் ஹைவேயில் கண்டெயினர் லாரிகள் எல்லாம் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. அந்த பகுதியில் ஒரு எக்ஸ்ப்ரஸ் சாலை அமைக்கவும், ஆர்கே.நகர், ராயபுரம்,திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஐடி காரிடார் அமைக்கவும், வடசென்னையில் எங்கெங்கு தொழிற்சாலைகள் இருக்கிறதோ, அந்த தொழிற்சாலைகளில் அமோனியா, கார்பன் டையாக்சைடு போன்ற வாயுக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரியப்படுத்த டிஸ்ப்ளே வைக்கவும்
இளைஞர்களுக்கு கூடுதல் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைக்கப்படும்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாளை முதல் OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!
Aadujeevitham: பிருத்விராஜ் படம் ரசிகர்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்!