பிரபல பிக்பாஸ் நடிகை ’திடீர்’ உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!

Published On:

| By christopher

bigboss actress shefali jariwala died at 42

பிரபல நடிகையும், இந்தி பிக் பாஸ் 13வது சீசன் போட்டியாளருமான ஷெஃபாலி ஜரிவாலாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. bigboss actress shefali jariwala died at 42

‘காந்தா லகா’ உள்ளிட்ட படங்கள் மற்றும் இந்தி பிக் பாஸ் 13வது பங்கேற்றதற்காக அறியப்பட்டவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவருக்கு 42 வயது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) இரவு ஷெஃபாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது கணவர் பராக் தியாகி, மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, மும்பையின் அந்தேரியில் உள்ள பெல்லூவ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு ஷெஃபாலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஷெபாலியின் மரணம் ரசிகர்களையும், சக நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை திவ்யங்கா திரிபாதி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், “ஷெஃபாலி பற்றிய செய்தியை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சீக்கிரம் போய்விட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்🙏” என்றார்.

ADVERTISEMENT

நடிகை அலி கோனி தனது பதிவில் “ஷெஃபாலியின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது💔” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share