புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By Selvam

purattasi month Bharani nakshatra palan 2024

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

உயர்வுகள் உறுதியாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆலோசனைகளைக் கேளுங்கள். குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கும். தம்பதியர் இடையே மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.

விசேஷங்களில் வீண் ஆடம்பரம் தவிருங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். உறவினர் வருகையால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். பொது இடத்தில் வார்த்தைகளில் நிதானம் தேவை.

கலைஞர், படைப்பாளிகள் திறமைக்கு உரிய மேன்மைகளைப் பெறுவீர்கள். சிலர் அயல்நாடு செல்லும் யோகம் வரலாம். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது நல்லது. வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். தலைவலி, அஜீரணம்,பல் உபாதைகள் வரலாம். செந்தில் வேலன் வழிபாடு செழிப்பு சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… என்ன காரணம்?

நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்!

டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!

ப்ரோ என் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share