தமிழ் சினிமாவில் மூத்த நடிகையான ஏ.சகுந்தலா(84) வயது மூப்பு காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 17) இரவு காலமானார்.
நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் 1970 ஆம் ஆண்டு வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சகுந்தலா.
அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்ற பெயர் சினிமாவில் பிரபலமாகி அதுவே அவருக்கான நிரந்தர பெயரானது.
தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார் சி.ஐ.டிசகுந்தலா. சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார்.
அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் படங்களில் தனி நடன காட்சிகளில் நடித்ததன் மூலம் தென்னிந்திய மொழி படங்களில் கிளாமர் நடனம் ஆடும் நடிகையாக பிரபலமானார்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படிக்காத மேதை, தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான என் அண்ணன, இதயவீணை, குறிப்பிடத்தக்க படங்களாகும்.
சினிமாவிலிருந்து விலகிய பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல் முதல் புதுச்சேரியில் பந்த் வரை!
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
“ஸ்டாலின் என்றாலே உழைப்பு” – ஏஐ தொழில்நுட்பத்தில் கலைஞர் உரை!
ஆக்ஸ்போர்டு டூ அரசியல் – தலைநகருக்கு மீண்டும் பெண் முதல்வர் : யார் இந்த அதிஷி?
சி ஐ டி சகுந்தலா புகைப்படத்துடன் அந்த இன்னொருவர் யார்? இருவருக்கும் என்ன சம்பந்தம்?