ப்ரோ என் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

விஜய் இன்னைக்கு பெரியார் திடலுக்கு போய் மரியாதை செலுத்துனது தான் ஹாட் டாபிக்கா மாறியிருக்கு…

இதபத்தி நம்ம நண்பர் ஒருத்தர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்..

“ப்ரோ… விஜய் தப்பான ரூட்ல போய்க்கிட்டு இருக்காருன்னு நம்ம மோகன் ஜி பேசுனத நீங்க பார்க்கலையான்னு” கேட்டாப்ல…

“என்ன ப்ரோ… தைலாபுரம் டூ கமலாலயம் டூ பெரியார் திடல் போனா ரூட்டு கரெக்டா இருக்குமான்னு” கேட்டேன்.

சைலன்ட்டா கிளம்பிட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ஜோ…
Other state சங்கீஸ் ~ ஏம்பா, சாமியவும் கும்பிடுறீங்க, சாமி இல்லன்னு சொன்ன பெரியாரயும் வணங்குறீங்களே, என்ன கணக்கு இது. புரியலயே..
TN ~ அது புரிஞ்சாதான், நீ தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிருவியே..!!

நெல்லை அண்ணாச்சி
உள்துறை அலுவலகத்தில் எந்த கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை……,அமித்ஷா
உங்களுக்கு ஆங்கிலம் வரலன்னா..நான் ஏண்டா இந்தி படிக்கணும்…!

நெல்லை அண்ணாச்சி
அதிர்ச்சியில் மது பிரியர்கள்
மது ” ஒழிப்பு ” மாநாட்டில் திமுக.

Mannar & company
வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமான நேரங்களில் எல்லாம் அதிகம் ஞாபகத்துக்கு வர்றது கடவுளைவிட பெரியார்தான்,
கடவுள் இல்லைன்னு சொன்னது சரிதானோன்னு!

 

ச ப் பா ணி
தவறு செய்தபின் கேட்கும் நீதிக்கதைகள்.. தண்டனையைவிட கொடுமையானது

mohanram.ko
அபார்ட்மெண்ட்க்கு செல்பவர்களும், ‘லிப்ட்’ கேட்டு தான் போறாங்க

கோழியின் கிறுக்கல்!!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு டீக்கடைகளே,
Employment Exchange!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

முப்பெரும் விழா… விருதுகள் வழங்கி கெளரவித்த ஸ்டாலின்

முப்பெரும் விழா… விருதுகள் வழங்கி கெளரவித்த ஸ்டாலின்
.

+1
2
+1
11
+1
1
+1
6
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *