உலகம் முழுவதும் பலராலும் விரும்பப்படும் உணவு வகைகள் பஞ்சாப் உணவுகள். சுவையான, காரமான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பஞ்சாப் உணவான இந்த பஞ்சாபி சிக்கன் கறியை நீங்களும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
பெங்களூர் தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 3 அல்லது 4
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி – 15 (பேஸ்ட்டாக அரைக்கவும்)
தேங்காய் – அரை மூடி (அரைக்கவும்)
கெட்டியான தயிர் – அரை கப்
புதினா – சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிது
சர்க்கரை – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 50 மில்லி
எப்படிச் செய்வது?
முந்திரியை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து வைக்கவும். சிக்கனை கழுவி மீடியம் சைஸில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இத்துடன் முந்திரி பேஸ்டில் பாதி, பாதியளவு இஞ்சி – பூண்டு பேஸ்ட் கலந்து இருபது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம், போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் மீதம் இருக்கும் இஞ்சி – பூண்டு விழுது, முந்திரி பேஸ்ட், தக்காளி சேர்த்து தீயை மிதமாக்கி மைய வதக்கவும். கூடவே மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா) சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இதில் அரைத்த தேங்காய், ஊறிய சிக்கன், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் புதினா இலைகளை சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து சர்க்கரை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
