அதிகரிக்கும் கொரோனா தொற்று… கர்ப்பிணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

Published On:

| By christopher

preganent ladies get covid warning from tn govt

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பல உயிர்களை பறித்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. preganent ladies get covid warning from tn govt

ADVERTISEMENT

LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாகவும், ஆனால் இந்த தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 200பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தனி கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரத்தில் ஒருவர் பலி! preganent ladies get covid warning from tn govt

இதற்கிடையே விழுப்புரம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை சில நாட்களாக பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான பேரப்பேரிக்கு வந்தார்.

ADVERTISEMENT

இன்று காலை அவரது உடல் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

கர்ப்பிணிக்கு முக்கிய அறிவுறுத்தல்! preganent ladies get covid warning from tn govt

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

குறிப்பாக கர்ப்பிணிகள் அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்றும், நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சில நாட்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும்

மேலும் கட்டாயம் இல்லாவிட்டாலும், தங்கள் பாதுகாப்பிற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது எனப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. preganent ladies get covid warning from tn govt

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share