கோடையில் வெப்பவாதம், நீரிழப்பை தடுக்க.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ..

Published On:

| By Santhosh Raj Saravanan

precautions measures to Dehydration And Heatstroke in summer

கோடைக் காலத்தில் நீரிழிப்பை தடுக்கவும், வெப்ப வாதம் வராமல் தடுக்கவும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் தற்போதே சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதத்திற்குப் பிறகு 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தமிழ்நாட்டில் பதிவாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நண்பகல் 11 மணியில் இருந்து 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலத்தில் இன்னும் வெப்பம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த கோடைக் காலத்தில்தான் அதிகளவில் உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. மேலும் வெப்ப வாதங்களும் ஏற்படுகின்றன. ஆகவே நீரிழிவு, வெப்ப வாதத்தில் (heatstroke prevention) இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நம்மை நாமே தற்காத்துக்கொள்ள முடியும்.

உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்

ADVERTISEMENT

கடும் கோடை காலங்களில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களுக்குத் தாகம் எடுக்கும் நேரத்திற்குள், உங்கள் உடல் (staying hydrated) ஏற்கனவே நீரிழப்புக்கு உள்ளாகியிருக்கலாம். நாள் முழுவதும் சீராகத் தண்ணீர் குடிப்பதும், இளநீர், மோர், மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறுகள் போன்ற இயற்கையான குளிர்ச்சி தரும் திரவங்களை அருந்துவது மிகவும் முக்கியம். கட்டிட வேலை உள்பட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு, எலக்ட்ரோலைட் சமநிலையைப் பேணுவது மிகவும் முக்கியம்.

உச்சிவெயிலில் வெளியே வர வேண்டாம்

ADVERTISEMENT

வெப்பத்தைச் சமாளிக்க அன்றாடப் பழக்கவழக்கங்களையும் மாற்றியமைக்க வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான உச்ச வெப்ப நேரங்களில் (stay cool in summer) வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது ​​பாதுகாப்பிற்காகக் கண்ணாடி மற்றும் தலைக்கவசங்களுடன், இலகுவான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். அதேபோல சன்ஸ்கிரீன் பூசுவதும் முக்கியமானது. ஏனெனில் அது சருமத்தைப் பாதுகாக்க உதவுவதோடு, வெப்பம் உறிஞ்சப்படுவதையும் குறைக்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்

வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் கீரை வகைகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கனமான, எண்ணெய் நிறைந்த (summer Cool Foods) மற்றும் அதிக காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவை உடல் சூட்டை அதிகரிக்கும். இலகுவான உணவுகளை உட்கொள்வது எளிதில் செரிமானம் ஆவதோடு, ஆற்றல் அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.

நீர்சத்து இழப்பு அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்

நீர்ச்சத்து குறைபாடின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக தொடர்ச்சியான சோர்வு, தலைச்சுற்றல், குமட்டல், அதிகப்படியான வியர்வை மற்றும் குழப்பம் போன்றவை உள்ளன. இந்த அறிகுறிகளை ஒருபோதும் (heat safety tip) புறக்கணிக்கக் கூடாது. உடனடியாக உடலுக்கு நீர்ச்சத்து அளிப்பது, மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ உதவி பெறுவது ஆகியவை உடல்நலம் மோசமடைவதை தடுக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share