பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2026: அப்ளை செய்வது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

pm internship scheme pmis 2026 eligibility stipend apply

பிரைம் மினிஸ்டர் இன்டர்ன்ஷிப் ஸ்கீம் (Prime Minister Internship Scheme – PMIS) 2026, இளைஞர்களுக்கு ரியல்-வேர்ல்ட் வேலை அனுபவம் (real-world work experience) வழங்க உருவாக்கப்பட்ட முக்கிய மத்திய அரசு திட்டமாகும்.

இந்த திட்டம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
PMIS யார் அப்ளை பண்ணலாம்?

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகன் (Indian citizen) ஆக இருக்க வேண்டும், 10ம் / 12ம் / ஐ.டி.ஐ / டிப்ளமோ / டிகிரி (10th / 12th / ITI / Diploma / Graduation) முடித்திருக்க வேண்டும், முழுநேர படிப்பு (full-time education) அல்லது வேலை (job) இருக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனைகள். மேலும் டிஸ்டன்ஸ் லேர்னிங் படிப்பவர்கள் மட்டும் அப்ளை பண்ணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: பொதுவாக 18 முதல் 25 வயது இடையே உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.

ADVERTISEMENT

இந்த திட்டத்தில் மாதம் சுமார் 5,000 – 9,000 ரூபாய் (monthly stipend), இதில் ஒரு பகுதி அரசு DBT மூலம் (Direct Benefit Transfer), மற்ற பகுதி கம்பெனி மூலம் வழங்கப்படும். மேலும் வேலைக்கு சேரும்பொழுது 6000 ரூபாய் ஒரு முறை  மானியத் தொகையாக கிடைக்கும்  என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்டர்ன்ஷிப் காலம்

இந்த திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 12 மாதம் வரை இன்டர்ன்ஷிப் வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் 50% நேரம் மற்றும் நேரடியாக வேலை செய்யும் இடத்தில் பயிற்சி கிடைக்கும் என்பது முக்கிய அம்சம்.

ADVERTISEMENT

இந்த திட்டத்தில் ஐ.டி (IT), பேங்கிங் & ஃபைனான்ஸ் (Banking & Finance), மான்யூஃபாக்சரிங் (Manufacturing), ஹாஸ்பிட்டாலிட்டி (Hospitality), எனர்ஜி (Energy) போன்ற பல துறைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் கிடைக்கும்.

எப்படி அப்ளை பண்ணுவது?
  • அதிகாரப்பூர்வ போர்டல் (official portal) செல்ல வேண்டும்
  • ரெஜிஸ்டர் (Register) செய்து லாகின் (Login) ஆக வேண்டும்
  • உங்கள் கல்வி, ஸ்கில்ஸ் (skills) விவரங்களை நிரப்ப வேண்டும்
  • இன்டர்ன்ஷிப் விருப்பங்களை தேர்வு செய்து அப்ளை செய்ய வேண்டும் என்பது செயல்முறை.

இந்த திட்டத்தில் ஏஐ அடிப்படையிலான மேட்சிங் சிஸ்டம் (AI-based matching system), உங்கள்  புரோபைலுக்கு ஏற்ற  கம்பெனிகளுடன் மேட்ச் செய்யப்படும் என்பது முக்கிய அம்சமாகும்.

ஏன் இந்த திட்டம் முக்கியம்?

இந்த திட்டத்தால் வேலை அனுபவம் கிடைக்கும், எதிர்காலத்தில் வேலை கிடைப்பது  அதிகரிக்கும் என்பதால் மிகவும் அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

பிஎம் இன்டர்ன்ஷிப் ஸ்கீம் 2026, வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒரு கோல்டன் வாய்ப்பாகும். நண்பர்களே, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல், சரியான நேரத்தில் அப்ளை பண்ணி உங்கள் கேரியரை next levelக்கு கொண்டு போங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share