நெதர்லாந்தில் பராசக்தி பட வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருந்தன.
ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பராசக்தி படத்துக்கும் தணிக்கை சான்றிதழ் தற்போது வரை கிடைக்கவில்லை என தகவல்கள் வருகின்றன.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ள ‘பராசக்தி’ படத்திற்கு, தணிக்கைக் குழு (CBFC) 23 காட்சிகளை நீக்கப் பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பராசக்தி வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பாவின் இந்திய திரைப்பட விநியோகஸ்தரான லினெக்ஸ் மீடியா நெதர்லாந்தில் ஜனநாயகன் திரையிடல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
“தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் படம் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே டிக்கெட்டுகளை வாங்கியவர்களுக்கு, அசல் கட்டண முறையில் 10 வேலை நாட்களுக்குள் பணம் திரும்ப செலுத்தப்படும்.
சிரமங்களுக்கு மனதார மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
