தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.
இதில் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
பல்லடம் வாக்காளர்கள் – மொத்தம் -322,530

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கோவை பல்லடம் தொகுதியில் திருப்பூர் மேயர் செல்வராஜ் திமுக வேட்பாளராக உள்ளார். இங்கு திமுகவுக்கு மிகப்பெரிய பலம் அருந்ததியர் வாக்குகள்.அவர்கள் முழுமையாக திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.பி. பரமசிவம் போட்டியிடுகிறார்.
தவெக சார்பில் ராம்குமார், நாதக சார்பில் தமிழினியன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
2001ல் இருந்து இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர். தற்போதைய அதிமுக வேட்பாளர் கே.பி. பரமசிவம் 2011ல் இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 38%
அதிமுக – 39%
தவெக – 15%
நாதக – 7% வாக்குகள் பெறும்
ஒரு சதவிகித வாக்குவித்தியாசத்தில் பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பரமசிவம் வெற்றி வாகை சூட வாய்ப்பிருக்கிறது. அதிமுக கோட்டையாக கருதப்படும் பல்லடத்தில் இந்தமுறை திமுக – அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
