தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் பழனி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
பழனி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

2026 சட்டப்பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் eன்.பாண்டி களம் இறங்குகிறார்.
அதிமுக சார்பில் ரவி மனோகரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரவீன் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகேஸ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அமைச்சர் ஐ பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குறிப்பாக 2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை 30,056 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2011 தேர்தலில் ஐபி செந்தில் குமார் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் சிபிஎம் வேட்பாளர் பாண்டி.
இந்த முறை பழனி தொகுதியை பாஜகவுக்கு கேட்டு போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதிமுக போட்டியிடுவதால் பாஜகவும் அதிருப்தியில் தான் இருக்கிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-45%
அதிமுக-36%
தவெக-12%
நாதக-6% வாக்குகள் பெறும்
இங்கே கள நிலவரம், திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.1
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
