கூடலூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

By Kavi

|

Published on 12 Apr 2026, 2:01 PM

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் கூடலூர் தனி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 கூடலூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கூடலூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் திராவிட மணி, அதிமுக சார்பில் பொன். ஜெயசீலன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீபக்சாய் கிஷோர், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. பொன் . ஜெயசீலன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

தற்போதைய திமுக வேட்பாளர் திராவிட மணி 2011,2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இங்கு எம்எல்ஏவாக இருந்தார். 2006 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. 

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி- 45%
அதிமுக கூட்டணி-34%
தவெக-14%
நாதக-6% வாக்குகள் பெறும்

இந்த முறை களம், திமுகவின் திராவிட மணிக்கே  சாதகமாக இருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel