பத்மநாபபுரம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 பத்மநாபபுரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பத்மநாபபுரம் அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதியாகும். 2006-ல் இருந்து 20 ஆண்டுகளாக இந்த தொகுதி திமுக வசம் உள்ளது.

இந்த முறை திமுக கூட்டணியில சிபிஎம் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.. 35 வருஷத்துக்கு பிறகு சிபிஎம் இங்கே களம் காண்கிறது.

1989-ல் சிபிஎம் கட்சியை சேர்ந்த நூர் முகமது வெற்றி பெற்றிருந்தார்.. சிபிஎம் வேட்பாளராக 2026ல் செல்வ சுவாமி போட்டியிடுகிறார்.

இங்கேயும் பாஜகதான் களம் காண்கிறது. பாஜக சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார். களத்தைப் பொறுத்தவரைக்கும் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னிலை வகிக்கிறது என்று சொல்லலாம்.

தவெக சார்பில் கிருஷ்ணகுமார், நாதக சார்பில் சீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி-48%
அதிமுக கூட்டணி -33%
தவெக-13%
நாதக-5% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் செல்வ சுவாமி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கன்னியாகுமரி | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share