ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் இன்று (செப்டம்பர் 18) குடும்பத்தினரோடு ஓ. பன்னீர்செல்வம் புனித நீராடி வழிபாடு செய்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில், மக்கள் தங்களுடன் வாழ்ந்து மறைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் பிண்டம் வைத்துத் திதி கொடுத்து வருகின்றனர்.
இதனால் இறந்தவர்களது ஆத்மா சாந்தியடையும் என்பது அவர்களது நம்பிக்கை.
மனைவிக்குத் திதி கொடுத்த ஓபிஎஸ்
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து இன்று ஓபிஎஸ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக் குழந்தைகளுடன் சென்று திதி கொடுத்தார்.

அக்னி தீர்த்த கடலில் நீராடி அவரது மனைவிக்குத் திதி கொடுத்த அவர், தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினார். பிறகு கன்னிகா பரமேஸ்வரி மகாலில் சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டார்.

இன்று மாலை தனது குடும்பத்துடன் ராமநாதசுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
மோனிஷா
