மோடி பிறந்தநாள்: முந்திக் கொண்ட ஓபிஎஸ்

By Minnambalam

|

Published on 16 Sep 2022, 8:42 PM

நாளை (செப்டம்பர் 17) பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒ. பன்னீர்செல்வம் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து

ADVERTISEMENT

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (செப்டம்பர் 17) 72 ஆவது பிறந்தநாள். நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்டம்பர் 16) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து குறிப்பில், ”செப்டம்பர் 17 ஆம் தேதி 2022 அன்று உங்களின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் தேசத்திற்கு நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் சேவைகளை நிறைவேற்ற வாழ்த்துகிறேன்.

ADVERTISEMENT

ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்திய அரசாங்கம் நமது வெளிப்படையின் ஊடுருவலை எதிர்த்து எல்லைகளைப் பாதுகாப்பதன் மூலம், பயனுள்ள உள்நாட்டு பாதுகாப்பை உறுதிசெய்து, வெளிநாட்டில் நமது ஆர்வத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து, இந்தியாவை உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியது.

இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு கொள்கை உருவாக்கம் மற்றும் நடவடிக்கைகளிலும் இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறீர்கள்.

ADVERTISEMENT

எப்பொழுதும் தேசத்திற்குப் பயனுள்ள மற்றும் தொடர்ந்த சேவையை உறுதி செய்து, கடவுளின் ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து இருக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடுமையான அதிகார யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கில், தனிநீதிபதி தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் எடப்பாடிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

அதன்படி எடப்பாடி பழனிசாமி தற்போது இடைக்காலப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்திலும் அதிமுகவின் அதிகார யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த பின்னணியில் எடப்பாடி, பன்னீர் ஆகியோரில் பாஜக யாரை ஆதரிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக இன்றே அவரை வாழ்த்தியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

modi birthday ops greetings aiadmk power war edapadi

பிறந்தநாள் விழா

நாளை பிரதமர் மோடி தேசிய தளவாட கொள்கையை தொடங்குகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கொள்கையானது எளிதாக வணிகம் செய்வதற்கும், எளிதாக வாழ்வதற்கும் உதவும் என்று தெரிவித்துள்ளது.

modi birthday ops greetings aiadmk power war edapadi

நாளை பிரதமரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் ”நமோ” (NaMo) என்ற செல்போன் செயலி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு பொருட்கள் ஏலம்

மேலும், பிரதமருக்கு பல மாநில முதல்வர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பரிசுகளை வழங்கியுள்ளனர். பலர் பரிசாக அளித்த 1200 பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளது. நாளை முதல் அக்டோபர் 2 ஆம் தேதி இணையம் வழியாக ஏலம் விடப்படுகிறது.

modi birthday ops greetings aiadmk power war edapadi

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 1,348 பரிசு பொருட்கள் pmmementos.in என்ற இணையத்தளம் வாயிலாக ஏலம் விடப்பட்டது.

மோனிஷா

சொத்துவரி, மின்கட்டண உயர்வு யாரால்? எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel