பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று விவரிக்கும் குழுவில் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்கிற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிரான இந்தியாவின் தொடர் போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்கள் ஐ நா பாதுகாப்புக்கு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் உட்பட முக்கியமான நட்பு நாடுகளுக்கு இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என மத்திய அரசு அறிவித்தது.
மேலும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கியக் குழுக்கள் தீவிரவாத செயல்களின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கான இந்தியாவின் தேசிய அளவிலான ஒருமித்த கருத்தையும், உறுதியான அணுகுமுறையையும் உலக நாடுகளின் முன் எடுத்துரைப்பார்கள். மேலும் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை இந்தப் பிரதிநிதிகள் குழுக்கள் உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தது மத்திய அரசு.
சசி தரூர், இந்திய காங்கிரஸ் கட்சி, ரவிசங்கர் பிரசாத், பாஜக, திரு சஞ்சய் குமார் ஜா, ஜே.டி.யு, பைஜயந்த் பாண்டா, பாஜக, கனிமொழி கருணாநிதி, தி.மு.க,
சுப்ரியா சுலே, என்சிபி, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா ஆகியோர் தலைமையில் வெளிநாடுகளுக்கு இந்திய எம்பிக்கள் குழு செல்லும் என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
தற்போது இந்த குழுக்களில் இடம் பெறக் கூடியவர்கள் யார் யார் என்ற விவரத்தையும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கனிமொழி எம்பி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாத்வியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறது. இந்தக் குழுவில்,சமாஜ்வாதி கட்சியின் ராஜீவ் ராய், தேசியவாத காங்கிரஸின் மியான் அதால்ப் அகமது, பாஜகவின் பிரிஜேஷ் செளதா,ஆர்ஜேடியின் பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆதியின்சோக் குமார் மிட்டல், தூதர்கள் மஞ்ஜீவ் எஸ்.புரி, ஜாவேத் அஸ்ரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
