ஆன்லைன் ரம்மி: சிறுவர்களுக்கு தெரிவது எப்படி – உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Prakash

”18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ”18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? இதில் அரசுக்கு உள்ளதைவிட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

ADVERTISEMENT

பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

ஜெ.பிரகாஷ்

நெருங்கும் தேர்தல்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் அமைச்சர்

ஆன்லைன் தடை காலாவதி: அடுத்தகட்டத்தில் தமிழக அரசு

Photo of author
Prakash
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share