ஓபிசி சான்றிதழ் வாங்கப் போறீங்களா? எத்தனை நாள் ஆகும்? கடைசி நேரத்துல ‘டென்ஷன்’ ஆகாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

obc ncl certificate processing time tamilnadu 2026 application status

“மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ணியாச்சு… எக்ஸாமுக்கும் படிச்சாச்சு. ஆனா கையில இந்த ஓபிசி (OBC-NCL) சர்டிபிகேட் மட்டும் இல்லையே!” என்று கலக்கத்தில் இருக்கும் மாணவர்களா நீங்கள்? மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற மிக முக்கியமான இந்தச் சான்றிதழை வாங்குவதில், பலர் செய்யும் தவறு என்ன தெரியுமா? “பாத்துக்கலாம்… நேரம் இருக்கு” என்று தள்ளிப் போடுவதுதான்.

நீட், ஐஐடி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம் முடிவுகள் வரும் இந்த நேரத்தில், ஓபிசி சான்றிதழ் குறித்த முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

எத்தனை நாளில் கிடைக்கும்? பொதுவாக இ-சேவை மையத்தில் (E-Sevai) விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பம் விஏஓ (VAO), வருவாய் ஆய்வாளர் (RI) மற்றும் தாசில்தார் என மூன்று நிலைகளைத் தாண்ட வேண்டும்.

  • அதிகாரப்பூர்வ டைம்: அரசு விதிமுறைப்படி விண்ணப்பித்த 15 முதல் 21 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைக்க வேண்டும்.
  • ரியாலிட்டி என்ன? சில நேரங்களில் அதிகாரிகளின் பணிச்சுமை, விடுமுறை அல்லது சர்வர் பிரச்னைகளால் இது 30 நாட்கள் வரை கூட இழுக்கலாம். அதனால், “நோட்டிபிகேஷன் வரட்டும், அப்புறம் வாங்கிக்கலாம்” என்று காத்திருந்தால், கடைசி நேரத்தில் நீங்கள் தான் அவதிப்பட நேரிடும்.

யாரெல்லாம் வாங்கணும்? பிசி (BC) மற்றும் எம்பிசி (MBC) வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மத்திய அரசுப் பணிகள் (UPSC, SSC, Railway) மற்றும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் (IIT, NIT, AIIMS) சேர விரும்பினால், கண்டிப்பாக இந்த ‘ஓபிசி – கிரீமிலேயர் அல்லாதவர்’ (OBC-NCL) சான்றிதழ் தேவை.

ADVERTISEMENT
  • முக்கியம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வேலிடிட்டி எவ்வளவு? இந்தச் சான்றிதழ் ஒரு நிதியாண்டிற்கு (Financial Year) மட்டுமே செல்லுபடியாகும். அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி வாங்கினாலும் சரி, மார்ச் மாதம் வாங்கினாலும் சரி… அது அந்த நிதியாண்டின் மார்ச் 31ஆம் தேதியோடு காலாவதியாகிவிடும். எனவே, ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு புதிய சான்றிதழ் வாங்குவதே புத்திசாலித்தனம்.

மாணவர்களே… நீங்க எக்ஸாமுக்கு எவ்ளோ சின்சியரா படிக்கிறீங்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை இந்தச் சான்றிதழ் வாங்குறதுலயும் காட்டுங்க. குறிப்பா, வருமானச் சான்றிதழ் (Income Certificate) வாங்கிய பிறகுதான் ஓபிசி-க்கு அப்ளை பண்ண முடியும். அதுக்கே ஒரு வாரம் ஆகிடும். அதனால, கடைசி நாள் வரைக்கும் காத்திருக்காம, இப்பவே ஆன்லைன்ல அப்ளை பண்ணிடுங்க. 6 மாசம் செல்லுபடியாகும் பழைய சர்டிபிகேட்டை நம்பி ரிஸ்க் எடுக்காதீங்க!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share