கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க நிர்மலா சீதாராமன் யோசனை!

Published On:

| By Minnambalam

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில் அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பாலராமபுரம் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது வசதி பயிற்சி மையத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பேசுகையில்,

ADVERTISEMENT

“கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கவும், கைத்தறி பொருட்களை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்புகளை பல வகைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நெசவாளரும் நிறுவனத்தின் லாபத்தில் பயனடைய வேண்டும்.

நெசவாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இ-மார்கெட்டிங் மற்றும் அரசின் இணையதளப் பக்கத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நபார்டு ஆதரவு அளிக்கும்.

ADVERTISEMENT

மத்திய அரசு பாலராமபுரம் மேம்பாட்டுக்கு மாநிலத்தின் எந்த திட்டத்தையும் பரிசீலிக்க தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன், “தொழில்துறையில் சரியான நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

-ராஜ்

பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார்: ஜோ பைடன்

பொன்னியின்செல்வன் வெற்றி: கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share