உலகம் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம்.
உலகம் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார். ட்விட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. அதில் ஆபத்து இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்?” என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இதுகுறித்து மேலும் பேசுகையில்,
“ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்கள் ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.
இது தொடர்பாக சமீபத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், “ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஜீரணமாவதற்கு வெந்நீர்… எந்த அளவுக்கு உண்மை?