மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்‘ நாவல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது.
விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தன.
பான் இந்தியா முறையில் உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து அமரர் கல்கி குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா ரவியிடம் அக்காசோலை வழங்கப்பட்டது.
ஜெ.பிரகாஷ்
உளவியல் த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
வம்சி இதயத்தை கொள்ளையடித்த திருமூர்த்தி
நல்ல ஒரு நன்றி கடன்