ADVERTISEMENT

60 வருஷ பழைய சட்டத்துக்கு குட்-பை… இன்னைக்கு முதல் New Income Tax சட்டம் அமல்: நமக்கு என்னென்ன லாபம்?

Published On:

| By Santhosh Raj Saravanan

New Income Tax Act 2025 replaces 1961 Act today

60 வருஷமா நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டம் Income Tax Act, 1961 ஒரு வழியா இன்னைக்கு ஓய்வுக்கு வந்துடுச்சு. இன்று ஏப்ரல் 1, 2026 முதல் நம் நாட்டுல புதிய வருமான சட்டமான  Income Tax Act, 2025 அதிகாரப்பூர்வமா அமலுக்கு வந்திருக்கு. வரி-னு சொன்னாலே ஒரு விதமான பயமும் குழப்பமும் வர்றது சகஜம்தான், ஆனா இந்த புது சட்டத்துல அரசாங்கம் இந்த வரி விதிமுறைகள அரசாங்கம் கொஞ்சம் simple ஆக்கியிருக்காங்க.

ADVERTISEMENT

இனி Assesment Year குழப்பம் வேண்டாம்

வரி கட்டுறவங்களுக்கு எப்பவுமே ஒரு பெரிய தலைவலி, இந்த ‘Financial Year’ (நிதி ஆண்டு) மற்றும் ‘Assessment Year’ (மதிப்பீட்டு ஆண்டு) இடையேயான வித்தியாசம். எந்த வருஷத்துக்கு கணக்கு காட்டுறோம்ங்கிற குழப்பமே பெரிய தலைவலியா இருக்கும். ஆனா புது சட்டத்துல இது எல்லாத்தையும் தூக்கிட்டு, சிம்பிளா  Tax Year அப்படிங்கிற ஒரே ஒரு பேரை கொண்டு வந்துட்டாங்க. இனிமே வருஷம்னா அது வரி கட்டுற வருஷம்தான், ரெண்டு மூணு பேரை பாத்து குழம்ப வேண்டாம்.

ADVERTISEMENT

பெத்தவங்களுக்கும் வாடகை வீட்ல இருக்கிறவங்களுக்கும் ஜாக்பாட்

இந்த புது சட்டத்துல நிஜமாவே சில செம சூப்பரான Human Interest விஷயங்கள் இருக்குங்க. அதுல முக்கியமானது நம்ம குழந்தைகளோட படிப்புச் செலவுக்கான சலுகை. இதுவரைக்கும் ஒரு குழந்தைக்கு மாசம் வெறும் 100 ரூபாய்னு கிடைச்ச சலுகை, இப்போ அப்படியே 3,000 ரூபாயா உயர்ந்துருக்கு. அதே மாதிரி ஹாஸ்டல் வசதிக்கான சலுகையையும் 300-ல இருந்து 9,000 ரூபாயா ஏத்திருக்காங்க. இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிம்மதிய தரும்.

ADVERTISEMENT

அதே மாதிரி வாடகை வீட்ல இருக்கிறவங்களுக்கும் ஒரு நல்ல செய்தி. இதுவரைக்கும் சென்னை, மும்பை மாதிரியான மெட்ரோ சிட்டிகளுக்கு மட்டும்தான் 50% HRA சலுகை கிடைச்சது. இப்போ பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத்னு இன்னும் பல நகரங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்திருக்காங்க. இதனால அந்த ஊர்ல வேலை பார்க்கிற IT employees உட்பட  அனைத்து மாத சம்பளக்காரங்களுக்கும் கைக்கு வர்ற காசு கொஞ்சம் அதிகமாகும்.

சாப்பாட்டுக்கும் கிஃப்டுக்கும் கூட சலுகைதான்

ஆபீஸ்ல கொடுக்குற Meal Coupons விஷயத்துலயும் ஒரு மாற்றம் நடந்திருக்கு. ஒரு வேளை சாப்பாட்டுக்கு 50 ரூபாய்னு இருந்த சலுகை இப்போ 200 ரூபாயா உயர்ந்திருக்கு. இதனால வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் வரி மிச்சமாகும்னு experts சொல்றாங்க. அதுமட்டுமில்ல, தீபாவளிக்கோ இல்ல வேற விசேஷத்துக்கோ ஆபீஸ்ல கொடுக்குற Gift limit 5,000-ல இருந்து 15,000-ஆக உயர்ந்திருக்கு. இந்த மாதிரி சின்ன சின்ன சலுகைகளால நம்ம பாக்கெட்டுக்கு பெரிய லாபம்தான்

Smart Form மற்றும் டிஜிட்டல் முறை

நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச அந்த Form 16 இனிமே Form 130-ஆ மாறப்போகுது. அதே மாதிரி பேங்க்ல வரி பிடிக்காம இருக்க நாம கொடுக்குற 15G/15H Forms எல்லாம் ஒன்னா சேர்ந்து Form 121-ஆ வருது. மொத்தத்துல manual works-அ குறைச்சு, எல்லாமே ஆன்லைன்ல ஈஸியா நடக்குற மாதிரி செஞ்சிருக்காங்க. ஒருவேளை நீங்க ரிட்டர்ன் தாக்கல் பண்ண லேட் ஆகிட்டாலும், இப்போ அபராதம் இல்லாமலே டிடிஎஸ் ரீஃபண்ட் வாங்கிக்க முடியும்ங்கிறது இன்னொரு பெரிய ப்ளஸ்.

பழைய சட்டத்துல இருந்த புரியாத வார்த்தைகளை நீக்கிட்டு, நம்ம எல்லாருக்கும் ஈசிய புரியிற மாதிரி இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது நிஜமாவே ஒரு பெரிய மாற்றம். இனி வரி கட்டுறதுங்கிறது ஒரு தண்டனையா இல்லாம, ஒரு சுலபமான கடமையா இருக்கும்னு நம்பலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share