தொடங்கிய என்.டி.ஏ பொதுக்கூட்டம் : மேடையில் மோடியுடன் இருக்கும் தலைவர்கள் யார் யார்?

Published On:

| By Kavi

என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை மதுராந்தகம் ஹெலிபேடு தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

தொடர்ந்து அங்கிருந்து பிரதமர் மோடி பொதுகூட்ட மேடைக்கு சென்றார்.

ADVERTISEMENT

தற்போது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியின் அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அந்த மேடையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி , தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மோடியுடன் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share