கங்காவாக மாறிய நயன்தாரா : டாக்ஸிக் பட நியூ லுக்!

Published On:

| By Kavi

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, முன்னணி நடிகை நயன்தாரா நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’  படத்தின் புதிய லுக் வெளியாகியுள்ளது.

யாஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், 2026 மார்ச் 19 அன்று வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

இத்திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா  ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நயன்தாராவின் லுக்குடன் கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்று படக்குழு கூறியுள்ளது. 

இந்நிலையில் நயன்தாரா குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் சமூக வலைதள பக்கத்தில்,

“நயன்தாராவை ஒரு புகழ்பெற்ற நட்சத்திரமாக நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு 20 ஆண்டுகாலம் சினிமா துறை அனுபவம் இருக்கிறது. ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை கண்டிராத வகையில் அவரை வெளிப்படுத்த விரும்பினேன். நயன்தாராவின் ஆளுமை கங்காவின் ஆன்மாவுடன் எவ்வளவு நெருக்கமாக எதிரொலித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் காங்காவாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவரின் நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அப்போதுதான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார்” என்று கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share