நாகர்கோவிலுக்கு வருகை தரும் பிரதமர் மோடி இன்று மாலை ‘ரோடு ஷோ’ மூலம் வாக்கு சேகரிக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் 3 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழக தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தலைவர்களின் சூறாவளி பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 மணிக்கு நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார்.
சென்னையில் விஜய் பிரசாரம்
மேலும் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 3 இடங்களில் பிரசாரம் செய்வார். சென்னை தியாகராய நகர், சேப்பாக்கம் மற்றும் எழும்பூரில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
