தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
நாகர்கோவில் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நாகர்கோவில் தொகுதியில் 2021 தேர்தலில் பாஜகவின் எம்.ஆர். காந்தி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனை 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறையும் சிட்டிங் எம்.எல்.ஏ. காந்தியை களமிறக்கியிருக்கிறது பாஜக. கன்னியாகுமரி தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்த திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் நாகர்கோவில் தொகுதியில் போட்டி போடுகிறார்.
தவெக சார்பில் பெர்வின் கிங்ஸ், நாதக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 40%
அதிமுக கூட்டணி-39%
தவெக-16%
நாதக-4%
இந்த தொகுதியில் போட்டி மிக கடுமையாக இருக்கிறது. திமுக வேட்பாளர் ஆஸ்டின் முன்னிலையில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
