மலையாளப் படத்தில் மிஷ்கின்!

Published On:

| By uthay Padagalingam

Im Game Malayalam Movie

டாம்க்ரூஸ் Im Game Malayalam Movie

சமகாலத் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனித்து தெரிபவர்களில் ஒருவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் இதுவரை 9 படங்கள் வெளியாகியிருக்கின்றன. ‘பிசாசு 2’ திரைப்படம் நீண்ட நாட்களாகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து வர, அதற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. Im Game Malayalam Movie

’மிஷ்கின் படங்கள் என்றால் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்’ என்ற நம்பிக்கை கொண்ட ரசிகர்கள், இன்றும் அவரது படைப்புகளுக்காகக் காத்து நிற்கின்றனர். அவர் இசையமைத்து இயக்கியிருக்கிற ‘ட்ரெய்ன்’ அதற்குத் தக்கவாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நெடுநாட்களாக அப்படியே இருக்கிறது.

இந்த நிலையில்தான், அவர் ஒரு மலையாளப் படத்தில் முதன்முறையாக நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Im Game Malayalam Movie

தான் இயக்கிய ‘நந்தலாலா’ மூலமாகப் பிரதான பாத்திரமாகத் திரையில் தோன்றியவர் மிஷ்கின். பிறகு தனது தோற்றத்திற்கு ஏற்ற பாத்திரங்களாக, அவராகப் பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி ஆகியன அப்படிப்பட்ட படங்கள் தான்.

மிஷ்கினை ஒரு நடிகராக, வித்தியாசமான திரையாளுமையாக உணர வைத்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ‘சூப்பர் டீலக்ஸ்’ அந்த மேஜிக்கை செய்தது.

அவர் நடித்த சுட்டுப் பிடிக்க உத்தரவு, பேச்சலர், மாவீரன் தொடங்கி சமீபத்தில் ‘ப்ளாக்பஸ்டர்’ ஆன ‘ட்ராகன்’ வரை அனைத்திலும் மிஷ்கின் நடிக்கிற பாத்திரங்கள் வழக்கத்திற்கு மாறானதாகவே தெரிந்திருக்கின்றன.

அந்த வரிசையில் அவரது மலையாள அறிமுகம் அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஐ’யாம் கேம் திரைப்படம்.

Im Game Malayalam Movie

துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிற இப்படத்தை இயக்குபவர் ஹிதாஸ் நகாயத். ஷேன் நிகம், அந்தோணி வர்கீஸ், நீரஜ் மாதவ் நடிப்பில் வெளியான ‘ஆர்டிஎக்ஸ்’ எனும் ’ப்ளாக்பஸ்டர்’ ஆக்‌ஷன் படத்தைத் தந்தவர் இவர். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸும் இருக்கிறார்.

ஜிம்ஷி காலித், ஜேக்ஸ் பிஜோய், சமன் சாக்கோ, அஜயன் சலிசேரி, சாண்டி எனப் பெரிய பட்டாளமே இதன் தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்பதை மட்டும் ‘பர்ஸ்ட் லுக்’கில் குறிப்பிடவில்லை.

‘கிங் ஆஃப் கோதா’ தோல்விக்குப் பிறகு, ‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு, துல்கர் சல்மான் நடிக்கிற மலையாளப் படம் இது. சீட்டாட்டம், கிரிமினல் குற்றம், கிரிக்கெட் என்று ’சூது’ தொடர்பான பல விஷயங்கள் இதில் இருக்கும் என்று சொல்கின்றன போஸ்டர்கள்.

மலையாளத்தில் தயாரானாலும், இப்படம் தமிழ் தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளிலும் ‘பான் இந்தியா’ அந்தஸ்தோடு வெளியாகப் போகிறதாம். சமீபத்தில் கேரளாவில் நடந்த இப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டிருக்கிறார் மிஷ்கின்.

ஆக, மிஷ்கின் நடிக்கிற ஆக்‌ஷன் படங்களில் குறிப்பிடத்தக்கதாக இப்படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. ‘தி கேம் இஸ் ஆன்’ என்று அவர் சொல்கிற ‘பஞ்ச்’சுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்..! Im Game Malayalam Movie

Im Game Malayalam Movie
Im Game Malayalam Movie
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share