ipl 2025 : பிளே ஆஃப் தகுதி பெறும் ’அந்த 4 அணிகள்’ எது? – ஒரு விரிவான பார்வை!

Published On:

| By christopher

which are 4 teams will enter in ipl play off 2025

நடப்பு ஐபிஎல் தொடரில் குறைவான வெற்றிகளை பதிவு செய்த 5 முறை சாம்பியன் ’சென்னை சூப்பர் கிங்ஸ்’, கடந்த சீசனில் ரன்னராக வந்த ’சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ மற்றும் ’ராஜஸ்தான் ராயல்ஸ்’ உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. which are 4 teams will enter in ipl play off 2025

இதனையடுத்து தற்போது அந்த ரேஸில் 7 அணிகள் உள்ள நிலையில், அவற்றுக்கான வாய்ப்புகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

பிளேஆஃப் தகுதி பெறுவது எப்படி?

ஐபிஎல் 10 அணிகள் கொண்ட போட்டியாக மாறிய பிறகு, பிளேஆஃப்களுக்கு தகுதி பெற ஒரு அணி குறைந்தபட்சம் 16 புள்ளிகளைப் பெற வேண்டும்.

70 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டத்தின் முடிவில், புள்ளிப்பட்டியலில் இருக்கும் முதல் நான்கு அணிகள் IPL 2025 பிளேஆஃப் வாய்ப்பை பெறும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் தங்கள் 14 லீக் போட்டிகளை முடித்த பிறகு ஒரே புள்ளிகளை பெற்றிருந்தால், பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை நெட் ரன்ரேட் (NRR) தீர்மானிக்கும்.

அணி வாரியான ஐபிஎல் 2025 பிளேஆஃப் தகுதி சூழ்நிலைகள்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

ஆர்சிபி மீதமிருக்கும் தங்களது மூன்று போட்டிகளில் வென்றால் ஐபிஎல் 2025 இன் லீக் கட்டத்தை 22 போட்டிகளுடன் முடிக்க வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் சொந்த மைதானமான சின்னசாமியில் அந்த அணி இரண்டு போட்டிகளை விளையாட உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 20 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பில் ஆர்.சி.பி அணி நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதை நம்பலாம்.

மீதமுள்ள போட்டிகள்: – v LSG (வெளி மைதானம்), v SRH, v KKR

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

நேற்று மழையால் போட்டி தடைபட்ட நிலையில், 15 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் IPL 2025 தற்போது புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அவர்கள் வரும் போட்டிகளில் தங்களது நேரடி போட்டியாளர்களான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளனர். பிளே ஆஃப் தகுதி பெற மீதமுள்ள மூன்று போட்டியில் குறைந்தபட்சம் ஒன்றில் வெற்றி பெற்ற வேண்டும்.

மீதமுள்ள போட்டிகள்:– v DC, v MI, v RR (வெளி மைதானம்)

மும்பை இந்தியன்ஸ் (MI)

தொடர்ச்சியாக 6 வெற்றியுடன் மும்பை தற்போது 14 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், பிளே ஆஃப் தகுதி பெற மேலும் இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும். அதில் இன்று நடைபெற உள்ள குஜராத் மற்றும் டெல்லி அணிகள் உடனான இரண்டு போட்டிகள் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெறுவது அந்த அணிக்கு சாதகமான அம்சம் ஆகும்.

மீதமுள்ள போட்டிகள்: v GT, v PBKS (வெளி மைதானம்), v DC

குஜராத் டைட்டன்ஸ் (GT)

இன்று மும்பையில் நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றி பெறத் தவறினாலும், மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகளை எட்ட முடியும். மீதமிருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், டைட்டன்ஸ் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. மும்பையைப் போலவே, 14 புள்ளிகள் உடைய GTக்கும் பிளேஆஃப் தகுதி பெறுவதற்கு குறைந்தது இரண்டு வெற்றிகள் தேவைப்படும்.

மீதமுள்ள போட்டிகள்: v MI (வெளி மைதானம்), v DC (வெளி மைதானம்), v LSG, v CSK

டெல்லி கேபிடல்ஸ் (DC)

புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் டெல்லி அணி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையென்றால் அந்த அணியின் விதியை ரன்ரேட் தான் தீர்மானிக்கும்.

மீதமுள்ள போட்டிகள்: v PBKS (வெளி மைதானம்), v GT, v MI (வெளி மைதானம்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரான ரிஷப் பந்தின் தலைமையிலான லக்னோவின் பிளேஆஃப் வாய்ப்பு அவ்வளவு உறுதியாக இல்லை. தற்போது 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ள அந்த அணி, மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவை பற்றி சிந்திக்க முடியும். லக்னோ அணி பிளே ஆஃப் செல்ல, தற்போது வெளியேற்றப்பட்ட அணிகளான சென்னை, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் அது சாதகமாக பார்க்கப்படும்.

மீதமுள்ள போட்டிகள்: v RCB, v GT (வெளி மைதானம்), v SRH

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

தற்போது 11 புள்ளிகளை கொண்டுள்ள கொல்கத்தா அணி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அப்போது தான் அந்த அணி 17 புள்ளிகளை பெறும். அதே போன்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் மீதமுள்ள போட்டிகளில் தலா இரண்டு வெற்றிகளை உறுதி செய்ய வேண்டும்.

மீதமுள்ள போட்டிகள்: v CSK, v SRH (வெளி மைதானம்), v RCB (வெளி மைதானம்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share