பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 18ம் தேதி கோவை வருகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
