தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மேட்டுப்பாளையம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கவிதா கல்யாண சுந்தரம், அதிமுக சார்பில் ஓ.கே சின்னராஜ், தமிழக வெற்றி கழகம் சார்பில் சுனில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்த தொகுதியில் 2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ கே செல்வராஜ் திமுக வேட்பாளர் டி ஆர் சண்முகசுந்தரத்தை 2,456 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2016 தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஓகே சின்னராஜ் போட்டியிட்டு திமுகவை தோற்கடித்தார்.
,2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களிலும் அதிமுகவை வெற்றி பெற்றுள்ளது.
இந்த முறை திமுக வேட்பாளராக போட்டியிட டி ஆர் சண்முகசுந்தரத்துக்கு சீட்டு தரப்படவில்லை. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி சுயேட்ச்சையாக களம் காண்கிறார். இது திமுகவுக்கு சவாலாக இருக்கிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி -28%
அதிமுக-42%
தவெக-15%
நாதக-5% வாக்குகள் பெறும்
அதிமுக வேட்பாளர் ஓ.கே சின்னராஜ் முன்னிலையில் இருக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
