இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு நம்ம அதிமுக நண்பர் வீட்டுக்கு போனேன். அவரு பேப்பர்ல ராசி பலன், குரு பெயர்ச்சி எல்லாம் பாத்துட்டு இருந்தாரு.
சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி, சுக்கிரன் மிதுனத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சினு படிச்சாரு
இதை கேட்டதும், அதிமுகவுல தான் இப்ப ராஜினாமா பெயர்ச்சி நடக்குதே அப்புறம் என்னனு கேட்டேன்.
கோவத்துல பேப்பர தூக்கி போட்டு போட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ArulrajArun
“தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் ரூ.1,28,934!”
-நான் வாங்குற சம்பளமே ₹19500 தாண்டா என் பேர்ல ரூ.1,28,934!” கடனா

ச ப் பா ணி
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
~மக்கள் நலனுக்காக எனும் வார்த்தை மிஸ்ஸிங்

மயக்குநன்
வெளுத்தது எல்லாம் பால் என கூட்டணிக் கட்சிகளை நம்பினோம்!- ஆர்.எஸ்.பாரதி.
இப்ப… கூட்டணிக்கே பால் ஊத்திட்டாங்களே தலைவரே..?!

செங்காந்தள்
ஒரு ஆறு மாசம் பொறுங்க மாமா.
எதுக்கு மாப்ள?
2027 ஆம் ஆண்டு வருவதற்கு மாமா

ArulrajArun
“கொளத்தூர்ல முடிச்சுட்டோம்.. அடுத்து சேப்பாக்கம்!”
எது Power Cut பிரச்சினையா …

படிக்காதவன்
கரண்ட் பவர் கட் ஆனதும்
ஆட்சி பவர் பத்தி பேச ஆரம்பிச்சிடுறாங்க…

iQKUBAL
வேலைக்கு போய் சம்பாதிக்காதவன் முட்டாள்..
வேலைக்கு போயும் சம்பாதிக்காதவன் பெரிய முட்டாள்
Writer SJB
லைட் போட்டு கார் ஓட்டலாம் லைட்டா போட்டு கார் ஓட்டக்கூடாது சாரே..!

மயக்குநன்
நாங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைக் காக்கும் வீரர்கள்!- சச்சின் பைலட்.
ஆனாலும்… கட்சி இன்னமும் பதுங்கு குழிக்குள்ளதானே இருக்கு..?!
லாக் ஆஃப்
