நீங்க நம்பலனாலும் அதான் நெசம் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

படிக்காதவன்

ADVERTISEMENT

தன் போக்கில் வந்துவிடும் இருளுக்கென்ன
மனிதர்கள்தான் வெளிச்சத்தை தேடி ஓடவேண்டியதாக இருக்கின்றது…

டிங் டாங்

ADVERTISEMENT

ஆண்ட்ராய்டு மொபைல்
இல்லாத நேரங்களில்,
ஆட்டோக்காரர்கள் தான்
நம் வழிகாட்டும் மேப் (Map)…

Royal Enfield Buddha

ADVERTISEMENT

ஒரு வாளி நீரினால் கரைத்து விடக்கூடிய
நம் சாம்பலுக்கா,
இத்தனை நாடகங்களும்….

iQKUBAL 

ஸினஸ்ல ரெண்டே பேரு தான்.. 
ஒன்னு நஷ்டப்பட்டு அடி வாங்குறவன்..
இன்னொன்னு லாபமாகி Audi வாங்குறவன்..

ArulrajArun

இந்தியாவில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே உள்ளது -மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் சிங் தக்கூர் பேச்சு!
-நீங்க நம்பலனாலும் அதான் நெசம் …

சரவணன். 𝓜

“பேப்பர் இல்லாமல் படிக்கும் ஒரே தலைவர் விஜய்..”
சமீபத்தில் தவெகவில் இணைந்த புதுச்சேரியை சேர்ந்த சாமிநாதன் பேட்டி…
அது மட்டுமா… படிக்கவே தெரியாம கூட படிக்கறவராச்சே…!

மயக்குநன்

உற்சாக மனநிலையில் உள்ளேன்!- தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்.
இன்னோவா தர்றதா விஜய் சொல்லிட்டாரு போல..?!

டிங் டாங்

கார்ல போறவனுக்காக நடந்து போறவன் வழிவிட்டா இந்தியா நடந்து போறவனுக்காக கார்ல போறவன் வழிவிட்டா துபாய்

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share