இன்னைக்கு தோழியோட ஜஸ் கடைக்கு போயிருந்தேன்…
“இப்பலாம் சினிமா காரங்க டிவோர்ஸ் நியூஸ்தான் ஊரெல்லாம் பேச்சா இருக்குனு பேசிக்கிட்டு இருந்தேன்”
அவ என்ன நினைச்சாலோ, கணவன் மனைவி டிவோர்ஸ் பண்ற மாதிரி, ஆட்சி பிடிக்கலனா மக்களும் டிவோர்ஸ் கொடுக்கிற மாதிரி சட்டம் இருந்தா நல்லாருக்கும்ல… அப்படிங்குறா
ஆத்தாடி… ஜூஸ் கடைய நாடாளுமன்றம் ஆக்கிடாத மானு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன்…
….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ச ப் பா ணி
பொண்ணுங்க போன் எடுக்க தாமதித்தால் காதலன்னு அர்த்தம்
ஆண் போன் எடுக்க தாமதித்தால் கடன்காரன்னு அர்த்தம்
mohanram.ko
வெளியூர் போகும்போது, வீட்ல சாதம் கட்டிக்கிட்டு போய் சாப்பிடுறது அந்தக் காலம்.
ஓட்டலில் பார்சல் கட்டிக்கிட்டு வந்து வீட்ல சாப்பிடுறது இந்தக் காலம்
கடைநிலை ஊழியன்
ஒண்ணு மட்டும் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..
ஒன்னும் ஒன்னும் – ரெண்டு..
ரெண்டும் ஒன்னும் – மூணு..
மூணு ஒன்னும் – நாலு.
ச ப் பா ணி
படத்தின் இடைவேளை பகுதிதான் உங்களுக்கு பிடிச்சிருக்குனு சொல்லக் காரணம்?
டேய் நான் தியேட்டர் கேண்டீன்ல பாப்கார்ன் போடுறவண்டா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மற்ற கட்சிகளுக்கு உளவு பார்க்க ஸ்லீப்பர் செல்-ஆக அனுப்பி வைத்துள்ளோம்”
-நாதக நிர்வாகிகள் விலகல் குறித்து சீமான் புதிய விளக்கம்
# டிடிவி.தினகரன் : இது என் டயலாக்ல்ல..?
mohanram.ko
மாலை சூடும் வேளை னு பாட்டு பாடுற… அப்புறம் ஏன்ப்பா சோகமா இருக்க?
அது கருங்காலி மாலை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தடைகள் தாண்டி வெற்றி… ஹேமந்த் சோரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!