இன்று சமூக வலைதளங்களில் வைரலான அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
ஜவஹர்லால் நேரு போட்ட
GST யை மோடிஜி ” குறைத்த “
மாதிரி ஆனந்த
கூத்தாடுறானுங்க….
-funny guys

ச ப் பா ணி
புரட்டாசி பிறந்தவுடன் நம்முள் இருக்கும் வள்ளலார் வெளிப்படுகிறார்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என அமித்ஷா அன்றே சொல்லிவிட்டார் ~ எடப்பாடி
இதைகூட அவர் கிட்ட பர்மிசன் வாங்கினப்புறம் தான் சொல்றேன்.. நம்பலேன்னா அவர் கிட்டயே கேட்டு பாருங்க.

Mannar & company
வேலை இல்லா திண்டாட்டத்துக்கு புது காரணம் கண்டுபிடிச்சாச்சு:
“ஜெமினி”, “ChatGPT”, “AI”.
அடுத்து மழை பெய்யாததுக்கு, போக்குவரத்து நெரிசலுக்கு, ஏன் உலகத்துல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் AI தான் காரணம்னு சொல்லுவானுங்க போல.

Sasikumar J
~ புரட்டாசி விரதத்தை எந்த அளவுக்கு ஸ்ட்ரிட் ஆஃப் ஃபாலோ பண்ற…!
~ தலைக்கு எக் புரோட்டின் ஷாம்பூ கூட யூஸ் பண்றது இல்ல…!!

ச ப் பா ணி
ஒவ்வொரு பிரபலம் இறக்கும் போதும்..உடல் பராமரிப்பு குறித்த செய்திகளே முதன்மை பெறுகின்றன.
Sasikumar J
AI இருக்கிற மாதிரி எப்பவுமே அழகா இருக்கணும்னு எதிர்பார்க்கலாம், ஆனா வாழ்க்கையோ ஆதார் ல இருக்கிறத விட மோசமாக தான் இருக்கும்…!

iQKUBAL
Empty pocket teaches you a Million things in Life.. 😏
ஏன்? கையில காசு இல்லையா..
ஆமா.. என்ன இப்ப..

லாக் ஆஃப்
