மலையாள நடிகர் ஜிஷ்ணு ராகவன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 35. ஜிஷ்ணுவுக்கு நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜிஷ்ணு, நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருந்தார்.
பின்னர், மீண்டும் கடந்த ஆண்டு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கொச்சியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜிஷ்ணு, இன்று காலை 8.15-க்கு மரணமடைந்தார்.
ஜிஷ்ணு தமிழ், மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் 21 படத்தில் நடித்துள்ளார். 2002-ம் ஆண்டு ஜிஷ்ணு நாயகனாக அறிமுகமான ‘நம்மல்’ என்ற மலையாளப் படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. நோயால் பாதிக்கப்பட்ட பிறகும் ஜிஷ்ணு தொடர்ந்து நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
