ADVERTISEMENT

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் நவீன தீண்டாமை? 9000 பாஸ் எங்கே போச்சு? – தவெக அரசை விளாசிய பாஜக

Published On:

| By Pandeeswari Gurusamy

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் ஏதோ உங்கள் அமைச்சர்களின் குடும்ப விழாவினை போல நடந்து முடிந்துள்ளது தவெக அரசின் மீது விழுந்த கரும்புள்ளிகள் என பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், ” மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் யாருக்கானது? வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமானதா விஜய் அவர்களே?

ADVERTISEMENT

17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகரில் நடக்கும் இந்த மகா கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க சாமானிய மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்கள்
தவெக அரசின் ஆணவத்திற்கான மற்றுமொரு சான்று.

இந்த கும்பாபிஷேகத்தை மக்கள் நேரில் கண்டு களிப்பதற்கென அச்சடிக்கப்பட்ட சுமார் 9000 Pass-கள் எங்கே போயின முதல்வரே? உங்கள் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே pass-களை வழங்கி, அவர்களை முதல் வரிசையில் அமர வைப்பதற்கா அரசு செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது?

ADVERTISEMENT

நேற்று மாலை முதல் கால்கடுக்க காத்திருப்பவர்களை, கும்பாபிஷேகம் நடக்கும் கோவிலின் அருகில் கூட நெருங்க விடாமல் உங்கள் அரசு தடுப்பதற்கு பக்தகோடிகள் என்ன பயங்கரவாதிகளா?

பணம் படைத்தவர்களுக்கும், VIP – களுக்கும் மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று நீங்களே ஒரு நவீன தீண்டாமையை அரங்கேற்றுவது, என்ன மாதிரியான மனநிலை?

ADVERTISEMENT

பொதுவாக கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில், தனி குழாய் ட்ரோன் மூலம் கோவிலைச் சுற்றியுள்ள பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும் நிலையில், பாட்டில் தண்ணீரை வாளி பக்கெட்டில் கலந்து அப்பாவி மக்களை உங்கள் அரசு ஏமாற்றுவது எத்தனை பெரிய பாவம்?

கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சடிப்பதில் இதுநாள் வரையிலும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றினீர்கள், கோவில் அறங்காவலர்களின் பெயர்களை உங்கள் இஷ்டத்திற்கு அழைப்பிதழில் இருந்து நீக்கினீர்கள், தற்போது பொதுமக்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளீர்கள்.

மொத்தத்தில், மதுரை பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் அதீத தலையீட்டினாலும், உங்கள் அலட்சியத்தாலும் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் ஏதோ உங்கள் அமைச்சர்களின் குடும்ப விழாவினை போல நடந்து முடிந்துள்ளது. இவை உங்கள் ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளிகள்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share