கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது.
கடந்த 2022ஆண்டு நட்ந்த பிஃபா கால்பந்து கோப்பையை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி முதன்முறையாக வென்றது.
அதுமுதலே மெஸ்ஸி இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகின. சமீபத்தில் அவரை கேரளா அழைத்து வர கேரள அரசு மேற்கொண்டு வந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில் ‘GOAT Tour of India 2025’ என பெயரில் மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துளார் சதத்ரு தத்தா.

இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு தொடக்கத்தில் அர்ஜெண்டினா சென்று மெஸ்ஸியின் தந்தையை அவரது இல்லத்தில் சந்தித்து பயணத் திட்டத்தை முன்வைத்தேன்.
சுமார் 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் மெஸ்ஸியின் பயணத் திட்டம், அவரது வருகை அடுத்த தலைமுறை இந்திய கால்பந்து வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினேன். அவர் வருவதற்கு உறுதியளித்தார்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் படி டிசம்பர் 12 ஆம் தேதி இரவு மெஸ்ஸி கொல்கத்தாவில் தரையிறங்குவார். அன்றிரவு தாஜ் வங்கம் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். மறுநாள் டிசம்பர் 13ஆம் தேதி அங்கு ரசிகர்களை சந்தித்து உரையாடுகிறார்.
தொடர்ந்து கொல்கத்தாவில் தனது சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து ஈடன் கார்டன் மைதானத்தில் ‘கோட் கோப்பை’ மற்றும் ’கோட் இசைக்கச்சேரி’ நடைபெறும்.
ஏழு பேர் கொண்ட நட்புறவான கால்பந்து போட்டியில், இதில் மெஸ்ஸியுடன் சவுரவ் கங்குலி, லியாண்டர் பயஸ், ஜான் ஆபிரகாம் மற்றும் பாய்ச்சுங் பூட்டியா ஆகியோர் இணைந்து விளையாடுவர்.
டிசம்பர் 13 மாலை அதானி அறக்கட்டளை நடத்தும் ஒரு தனியார் நிகழ்விற்காக மெஸ்ஸி அகமதாபாத்திற்குச் செல்வார்.
டிசம்பர் 14 ஆம் தேதி மும்பை செல்லும் அவர், வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் GOAT இசை நிகழ்ச்சி மற்றும் GOAT கோப்பையில் பங்கேற்பார். அங்கு ரன்வீர் சிங், ஆமிர் கான் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இடம்பெறும் பாலிவுட் அணியை, சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா, மெஸ்ஸி ஆகிய ஜாம்பவான்கள் அணி சந்திக்கும்.
அங்கிருந்து CCI பிராபோர்னில் மூடப்பட்ட விளையாட்ட அரங்கில் ரசிகர்களை சந்திக்கிறார்.
அங்கு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் படேல் விளையாட்டின் தீவிர ரசிகரான மெஸ்ஸி, லியாண்டர் பயஸ், தோனி உள்ளிட்ட இந்திய பிரபலங்களுடன் விளையாட உள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்க உள்ளார். அதன்பின்னர் ஃபெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெறும் கோட் இசை நிகழ்ச்சி மற்றும் கோட் கோப்பையில் பங்கேற்பார்” எனத் தெரிவித்தார்.

கடைசியாக 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலா – அர்ஜெண்டினா இடையிலான FIFA நட்புரீதியான போட்டியில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
இதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இறுதியில் மீண்டும் இந்தியாவிற்கு மெஸ்ஸி வருவது கால்பந்து ரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவருடன், இன்டர் மியாமி அணி வீரர்கள் ரோட்ரிகோ டி பால், லூயிஸ் சுவாரெஸ், ஜோர்டி ஆல்பா மற்றும் செர்ஜியோ பஸ்கெட்ஸ் ஆகியோரும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெஸ்ஸி பங்கேற்கு நிகழ்ச்சியில் பங்குபெற டிக்கெட் கட்டணமாக ரூ.3,500 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
******
விளம்பரம்
சம்பவமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று தத்தா வலியுறுத்தினார்.
புதிய கூடுதலாக CCI, பிராபோர்னில் மும்பை படேல் GOAT கோப்பை நடைபெறும்.
டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியில்,மெஸ்ஸி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திப்பார்.
தர்மசாலாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 போட்டியை விளையாடிய ஒரு நாள் கழித்து, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் விராட் கோலி மற்றும் ஒரு பெரிய “மெஸ்ஸி ரசிகரான” ஷுப்மான் கில் ஆகியோரையும் அழைப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
