இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள்: ஸ்ருதி ஹாசன்

Published On:

| By Balaji

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

2009 ஆண்டு வெளியான ‘லக்’ இந்தி திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. நடிகர் கமல்ஹாசனின் மகள் என்னும் அடையாளத்துடன் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த நடிகை ஸ்ருதி ஹாசன், தொடர்ந்து கதாநாயகியாகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையால் திரைத்துறையில் தனித்துத் தெரிந்தார்.

ADVERTISEMENT

2011ஆம் ஆண்டு ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், அதனைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ‘3’ விஷாலுடன் ‘பூஜை’, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’, அஜித்துடன் இணைந்து ‘வேதாளம்’, சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். அவர் சினிமா உலகில் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

ADVERTISEMENT

Thankyou from the bottom of my ❤️ I’m so Thankful for all the work,memories,lessons, highs,lows,joy and love … and Thankyou to the people who enrich my journey ???????????????????????? https://t.co/31MTSl1DZL

— shruti haasan (@shrutihaasan) July 24, 2020

இந்த நிலையில் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இத்தனை வருடங்களாக நான் செய்த வேலைகள், நினைவுகள் கற்ற பாடங்கள், சந்தித்த ஏற்ற இறக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் அன்பு என அனைத்தையும் தந்த அனைவருக்கும் ரசிகர்களாகிய பொது மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share