போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு புதிய வட்டி இதுதான்: மத்திய அரசு அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

latest post office saving scheme rates 2026

மத்திய நிதி அமைச்சகம் நேற்று (டிசம்பர் 31) PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மறுஆய்வு செய்தது. அதன்படி, வட்டி விகிதங்கள் மாறாமல் அப்படியே தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் 2026 ஜனவரி-மார்ச் காலாண்டில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

புதிய வட்டி விகிதங்கள்:

ADVERTISEMENT
  • அஞ்சலக சேமிப்புக் கணக்கு: 4.0% (ஆண்டுக்கு ஒருமுறை)
  • 1 ஆண்டு கால வைப்பு நிதி: 6.9% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 708 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
  • 2 ஆண்டு கால வைப்பு நிதி: 7.0% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 719 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
  • 3 ஆண்டு கால வைப்பு நிதி: 7.1% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 719 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
  • 5 ஆண்டு கால வைப்பு நிதி: 7.5% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 771 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
  • 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி: 6.7% (காலாண்டுக்கு ஒருமுறை)
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2% (ரூ. 10,000-க்கு காலாண்டுக்கு ரூ. 205 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை மற்றும் வழங்கப்படும்)
  • மாத வருமான கணக்கு: 7.4% (ரூ. 10,000-க்கு மாதத்திற்கு ரூ. 62 வட்டி) (மாதாந்திரம் மற்றும் வழங்கப்படும்)
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்: 7.7% (ரூ. 10,000-க்கு முதிர்வு மதிப்பு ரூ. 14,490) (ஆண்டுக்கு ஒருமுறை)
  • பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்: 7.1% (ஆண்டுக்கு ஒருமுறை)
  • கிசான் விகாஸ் பத்திரம்: 7.5% (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்) (ஆண்டுக்கு ஒருமுறை)
  • மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: 7.5% (ரூ. 10,000-க்கு முதிர்வு மதிப்பு ரூ. 11,602) (காலாண்டுக்கு ஒருமுறை)
  • சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம்: 8.2% (ஆண்டுக்கு ஒருமுறை)

இந்த சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், பெரும்பாலும் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வட்டி விகிதங்களை அரசு காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கிறது. அந்த வகையில் தான் தற்போது 2026 ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான அறிவிப்பு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share