கொரோனா குணமாகிவிட்டதா? அமிதாப் பச்சன் விளக்கம்!

Published On:

| By Balaji

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அது முற்றிலும் போலியானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் என்று போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூலை 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கோவிட்-19 பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவி, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாங்கள் விரும்பி நேசிக்கும் அமிதாப் பச்சனின் குடும்பம் கொரோனாவின் பிடியில் சிக்கி இருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. அவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற்று வர வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த நிலையில் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளதாகவும், அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புகிறார் எனவும் இன்று(ஜூலை 23) மாலை ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ADVERTISEMENT

அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடையந்தனர். ஆனால், ‘தான் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையவில்லை’ என்று கூறி அமிதாப் பச்சன் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

.. this news is incorrect , irresponsible , fake and an incorrigible LIE !! https://t.co/uI2xIjMsUU

— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020

அவர் தனது பதிவில், **“இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, முற்றிலும் போலியானது”** என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share