தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
குளச்சல் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

குளச்சல் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. காங்கிரஸ் பிரின்ஸுக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் 3 முறை இங்கே வெற்றி பெற்றவர். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷை 24,832 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
விளவங்கோடு எம்.எல்.ஏ.வான தாரகை கத்பர்ட் இந்த முறை குளச்சலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இங்கே காங்கிரஸுடன் நேரடியாக பாஜக மோதுகிறது. பாஜகவின் சிவகுமார் வேட்பாளராக களம் காண்கிறார்.
தவெக வேட்பாளராக பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ், நாதக வேட்பாளராக ஆன்சி சோபா ராணி ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி-47%
அதிமுக கூட்டணி -35%
தவெக-12%
நாதக-5%
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
