தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
கவுண்டம்பாளையம் வாக்காளர்கள் – மொத்தம் -4,07,507

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.ஆர்.ஜி. அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் கே.பி. சூரியபிரகாஷ் களமிறங்குகிறார். அதிமுகவின் அருண்குமார் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளவர்.
காங்கிரஸ் வேட்பாளர் சூரியபிரகாஷ், இளைஞர் காங்கிரஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தவர். பெரிய அறிமுகம் இல்லாதவர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கனிமொழி, நாதக சார்பில் கலாமணி ஆகியோர் களமிறங்குகின்றனர்
2021 தேர்தலில் பி.ஆர்.ஜி. அருண்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணனை 9,776 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்
திமுக- 36%
அதிமுக-40%
தவெக-17%
நாதக-6% வாக்குகள் பெறும்
அதன்படி, சிட்டிங் எம்.எல்.ஏ அருண்குமார் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
