இந்த ஒரு பழம் மட்டும் போதும்.. முகம் அப்படியே பளபளப்பாக மாறும்.. எப்படி தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

kiwi fruit face packs to make your face glow

நாம் முகப்பொலிவிற்காக நிறைய ஃபேஸ் பேக்குகளை அப்ளை செய்திருப்போம். அதில் பழங்கள், காய்கறிகளான பப்பாளி, கேரட் போன்ற பழங்களை ஃபேஸ் பேக்காக மாற்றி இருப்போம். ஆனால் மற்ற பழங்களைக் காட்டிலும் கிவி பழம் முகத்திற்கு கூடுதல் பொலிவை தருகிறது. கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி கே மற்றும் இ உள்ளது. இந்த வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

சரும சேதத்திலிருந்து பாதுகாக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சருமப் பொலிவை மேம்படுத்தவும் உதவுகின்றன. கிவி ஃபேஸ் பேக்குகளை பல வழிகளில் நம் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. முகப்பரு வராமல் தடுக்கிறது, கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

ADVERTISEMENT

வீட்டிலேயே கிவி ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

கிவி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ADVERTISEMENT

ஒரு கிண்ணத்தில் கிவி பழத்தை மென்மையாகும் வரை பிசையவும். அதில் ஒரு டீஸ்பூன் தேனை நன்கு கலக்கவும். உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

கிவி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

ADVERTISEMENT

ஒரு கிண்ணத்தில் கிவி பழத்தை மென்மையாகும் வரை மசிக்கவும். அதனுடன் தயிரைச் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கிவி மற்றும் ஓட்ஸ் பேஸ் பேக்

1 பழுத்த கிவி பழம், 1 தேக்கரண்டி ஓட்ஸ் மாவு எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கிவி பழத்தை மென்மையாகும் வரை மசிக்கவும். ஓட்ஸ் சேர்த்து நன்கு மசியும் வரை கிளறவும். பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஃபேஸ் பேக்கை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கிவி மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் இயற்கையாகவே முகத்திற்கு ஒரு ஈரப்பதத்தை தரும். வெள்ளரிக்கையுடன் கிவி பழத்தையும் சேர்த்து நன்கு மசித்து முகத்திற்கு அப்ளை செய்து 15 அல்லது 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

மேலே குறிப்பிட்டுள்ள பேஸ் பேக்களை தயாரிக்க நல்ல புதிய கிவி பழங்களை பயன்படுத்த வேண்டும் மற்றும் சுத்தமான குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். எந்தவொரு புதிய சரும பராமரிப்பு முறையிலும் ஈடுபடுவதற்கு முன், உங்கள் சருமம் எதிர்மறையாக செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.

உங்களுக்கு ஒவ்வாமை சருமம் இருந்தால், புதிய பொருட்களை முயற்சிக்கும் முன் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் கிவி ஃபேஸ் பேக்குகளை இனி சேர்த்துக் கொள்ளுங்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share