இந்தியவில் படிபடியாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கேரளாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். kerala corona spread increase
இந்தியாவில் மீண்டும் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த மே 25ஆம் தேதி நிலவரப்படி தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை தரவுகள், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தான் அதிக அளவு பாதிப்பு இருப்பதாக கூறுகின்றன.
அந்த தரவுகளின் படி கேரளாவில் 1,147 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 424 பேரும், டெல்லியில் 294 பேரும், குஜராத்தில் 223 பேரும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பேரும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இரண்டு பேரும், டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மீண்டும் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது வீரியம் குறைந்த தொற்று என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் அதை அணிந்து கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளது. kerala corona spread increase