மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. kamalhassan thug life interview goes viral
பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை, மும்பை, கேரளாவிற்கு படக்குழுவினர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு கமல்ஹாசன், த்ரிஷா, அபிராமி ஆகிய படக்குழுவினர் பேட்டி அளித்தனர்.
அப்போது கமல்ஹாசனிடம் தொகுப்பாளர் கிருஷ்ணா, “ சார் 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டீர்கள். இப்போதும் ரிகர்சல் செய்த பிறகு தான் நடிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல், “நான் ரிகர்சல் செய்யாம வேலை பார்த்ததே இல்ல.. மணி சார் படம் பன்றதுக்கு முன்னாடி, ’இன்னைக்கு ஷூட்டிங் இருக்கா’னு என்கிட்ட கேப்பாரு. ‘இல்ல ரிகர்சல்’னு சொல்லுவேன்.
அப்போ தமிழ் இண்டஸ்ரில இருந்த ஸ்டூடியோஸ்ல ரிகர்சல் ஹால்னு தனியாவே இருக்கும். ஒருநாள் வாள் சண்ட போய்கிட்டு இருக்கும். மறுநாள் குரூப் டான்ஸ் பிராக்டிஸ் போகும்.
எனக்கு நிஜமாவே நடிப்பை விட ரிகர்சல் தான் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அங்க தான் அதிகமா கத்துக்க முடியும். வாத்தியாரா சொல்லிக் கொடுக்கும் போது தான் அதிகமா கத்துக்க முடியும். சோ ரிகர்சல் கண்டிப்பா பண்ணனும்.
என்னை பொறுத்தவரை யாராவது ரிகர்சல் பண்ணாம ‘நான் ஆன் ஸ்பாட்ல செய்வேன்’னு சொன்னா, அது தற்பெருமை கூட இல்ல.. அது ஒரு சில்றத்தனம்”