இன்னைக்கு ஆபிஸ் போயிட்டு பஸ்ல வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். அப்ப ஒருத்தரு ஓடி வந்து குரங்கு மாறி பஸ்ல தாவி ஏறினாரு.
அவர திட்டுன கண்டக்டரே கொஞ்சம் கூட கண்டுக்காம, “கீழ்ஸ்ரீக்கு ஒரு டிக்கெட் தாங்க’னு கேட்டாரு.
அதக் கேட்டு சட்டுனு ஜர்க்கான கண்டக்டர், ’கீழ்ஸ்ரீயா? அது எங்கயா இருக்கு?னு கேட்க,
”என்ன சார் நீங்க? மைசூர் பாக்கையே மைசூர் ஸ்ரீனு மாத்திட்டாங்க… அதே மாதிரி.. கீழ்ப்பாக்கத்தை, கீழ்ஸ்ரீனு மாத்திருப்பாங்கனு நெனச்சேன். இன்னும் மாத்தல போல. சரி கீழ்ப்பாக்கத்துக்கு ஒரு டிக்கெட் தாங்க”னு சொன்னாரு.
அதே கேட்ட கண்டக்டரு.. வடிவேலு சொல்றா மாறி, ‘எனக்குன்னே வருவீங்களாடா’னு தலையில அடிச்சிக்கிட்டே டிக்கெட்ட கிழிச்சி கொடுத்தாரு. update kumaru memes and trolls may 23
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 23

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது.
நிம்மி : ஜி.. நேத்து தங்கம் வாங்கினவங்க எல்லாம் இந்த வித்தியாசத்துகான லாபத்துக்கு ஜிஎஸ்டி கட்டனும்னு சொல்லிறலாம்.. எப்படி என் ஐடியா..?

☕️ டீ இன்னும் வரலை⏳
ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவை போன் பேசுறவன் பிசினஸ் மேன் இல்லைடா
ரெண்டே போன்ல தன்னோட பிசினஸை முடிக்கிறவன் தான்டா
உண்மையான பிசினஸ் மேன்…

திருப்பூர் சாரதி
உம் பேரென்ன?
பாகிஸ்தானு…
இல்ல இனிமே உம்பேரு ஸ்ரீகிஸ்தான்தான், ஓகே?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. கொதிக்கும் குங்குமக் குழம்புதான் பாய்கிறது” – ஜி
இப்படி தான் எங்க ஜி… அப்பப்ப குழம்பிடுவாரு…

குருநாதா
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னப் பொறுத்தவர காவியம்
என்ன சார் பண்றீங்க ?
செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் வச்சுருக்கேன்.

Sasikumar J
காதல் தோல்வில செத்துகிட்டு இருந்த இளைஞர் கூட்டம்
இப்போ ஆன்லைன் ரம்மில செத்துகிட்டு இருக்காங்க…!

ArulrajArun
இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் – மீண்டும் மீண்டும் பேசிவரும் ட்ரம்ப்
ஜி மனசாட்சி : இவரு வேற.. திரும்ப திரும்ப என்னோட பர்ஃபார்மன்ஸ்லயே கை வைக்கிறாரு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தமிழர்களுக்கான முறைப்படியான டீ சக்ரா கோல்டு – விளம்பரம்
டீ ல என்னடா முறைப்படி முறை இல்லாத படி..? என்னடா இது பித்தலாட்டம்..?
லாக் ஆஃப்