RCB vs SRH : புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க போராடிய பெங்களூரு அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணி. virat kohli rcb defeated by srh with 42 runs
லக்னோவில் உள்ள வாஜ்பாயி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று (மே 23) மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இசான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்தார்.

நல்ல தொடக்கம்… ஆனால் தோல்வி!
தொடர்ந்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி நல்ல தொடக்கம் தந்தனர். அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக ஆடிய சால்ட் 32 பந்துகளில் 5 சிக்சர்கள் 4 பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். அதே போன்று விராட்டும் 25 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
எனினும் அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 189 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த அந்த அணி, அடுத்த 16 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து தாரை வார்த்து தோல்வியை தழுவியது.

புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் நீடிக்க முயன்ற குஜராத் அணியை நேற்று போட்டியிலிருந்து வெளியேறிய லக்னோ அணி வீழ்த்தியது.
அதேபோல முதலிடம் பிடிக்க முயன்ற பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அந்த அணியின் ரசிகர்ளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.