படத்தின் பட்ஜெட்டை விட 10 மடங்கு வசூலை எட்டி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாக பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். tourist family collecton reach 75 cr at world wide
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.
பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் நுழையும் இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் எப்படி தங்களுக்கு வரும் நெருக்கடியை சமாளிக்கின்றனர் என்பதை பீல் குட் படமாக பதிவு செய்தது டூரிஸ்ட் பேமிலி.
இப்படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 4வது வாரத்திலும் ஹவுஸ்புல்லாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 7 கோடி தான் என்ற நிலையில், தற்போது 10 மடங்காக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழுவுக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.