சிபிஎஸ்இ-யில் 124 காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்! அப்ளை பண்ண ரெடியா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Job vacancies in CBSE

“மத்திய அரசு வேலைதான் லட்சியம்… அதுவும் கல்வித்துறையில் அதிகாரியாக வேண்டும்” என்று நினைக்கும் பட்டதாரிகளுக்கு, இதோ ஒரு சூப்பர் செய்தி. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை நிர்வகிக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தனது நிர்வாக அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 124 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணி அல்லாத, நிர்வாகப் பணிகள் (Administrative Posts) என்பதால், அனைத்துத் துறைப் பட்டதாரிகளுக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT

என்னென்ன வேலை?

குரூப் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய மூன்று நிலைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ADVERTISEMENT
  • உதவிச் செயலாளர் (Assistant Secretary): நிர்வாகம், அகாடமிக்ஸ், ஸ்கில் எஜுகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 44 இடங்கள்.
  • கணக்கு அதிகாரி (Accounts Officer): நிதித் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு 5 இடங்கள்.
  • ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer): சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் 15 இடங்கள்.
  • மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer): 11 இடங்கள்.
  • கணக்காளர் (Accountant & Junior Accountant): 46 இடங்கள்.

கல்வித் தகுதி என்ன?

பணிக்கு ஏற்றவாறு தகுதிகள் மாறுபடும்.

ADVERTISEMENT
  • உதவிச் செயலாளர்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு முன் அனுபவம் தேவைப்படலாம்.
  • ஜூனியர் இன்ஜினியர்: பி.இ/பி.டெக் (சிவில்/எலக்ட்ரிக்கல்) முடித்திருக்க வேண்டும்.
  • கணக்காளர்: வணிகவியல் (Commerce) அல்லது கணக்குப்பதிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு அதிகாரி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் அவசியம்.

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசுப் பணி என்பதால், 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கப்படும்.

  • குரூப் ஏ பதவிகளுக்கு (உதவிச் செயலாளர்) மாதம் சுமார் ரூ.80,000க்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.
  • குரூப் சி பதவிகளுக்கு (இளநிலை கணக்காளர்) மாதம் ரூ.30,000க்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வு (Computer Based Test – CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். உயர் பதவிகளுக்குத் தேர்வைத் தொடர்ந்து நேர்காணல் (Interview) நடைபெறும். திறன் சார்ந்த பணிகளுக்குத் திறன் தேர்வு (Skill Test) உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in அல்லது cbse.nic.in என்ற முகவரியில் ‘Main Website’ பகுதிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய கல்வித்துறையில் கெத்தான வேலையில் அமர நினைப்பவர்கள், கடைசித் தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share